Vinayagar

Vinayagar

Tuesday, November 30, 2010

தஞ்சைப் பிரகதீசுவரர் கோயில்

கோயில் இடது பக்கத்தின் முன் தோற்றம்

தட்சிணாமூர்த்தி கோயில் நுழைவாயில்

 கோயில் வலது பின்பக்கத்தின் தோற்றம்

கோயில் இடது பக்கத்தின் முன் தோற்றம்
 கோயில் ராஜகோபுரம்

கோயில் முற்றத்தில் உள்ள அலங்கரிக்கப்பட்டத் தூண்

 சுப்பிரமணியர் கருவறைக்கு செல்லும் பாதை 

தஞ்சை பெரிய கோயிலின் நுழைவாயில்

காளை முக சிவன்

கூரையில் வரையப்பட்ட சுவரோவியங்கள்

தஞ்சைப் பெருவுடையார் கோயில் அல்லது பிரகதீசுவரர் கோயில் ஆனது  இந்து சமயக் கோயிலும் உலகப் பாரம்பரியச் சின்னமும் ஆகும்.இக்கோயில், 10 ஆம் நூற்றாண்டில், சோழப் பேரரசு காலத்தில் இராஜராஜ சோழ மன்னனால் கட்டப்பட்டது. ஆரம்பத்தில் இராஜராஜேஸ்வரம் என்றும் பின்னர், தஞ்சையை நாயக்கர்கள் ஆண்ட காரணத்தால் தஞ்சைப் பெருவுடையார் கோயில் என்றும் அழைக்கப்பட்டது. பின்னர் 17, 18ஆம் நூற்றாண்டுகளில் மராட்டிய மன்னர்களால் ஆளப்பட்டபோது பிருகதீசுவரம் ஆகியது. தஞ்சைப் பெரியகோவில் எனவும் இக்கோவில் அறியப்படுகிறது.

இக்கோவில் சுமார் 7 ஆண்டுகளில் கட்டி முடிக்கப்பட்டது.  இன்று தமிழகத்தின் மிக முக்கியமான சுற்றுலாத்தலமாக விளங்கும் இது 1987ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தால் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டது. 1006ம் ஆண்டு கட்டத் தொடங்கி 1010ம் ஆண்டு முடிக்கப்பட்ட இந்த கோயிலுக்கு 2010வது ஆண்டோடு 1000 வயது முடிவடைந்துள்ளது.

இக்கோயிலின் கட்டிடக்கலை சோழர் கால கட்டிடக்கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டாகும். தஞ்சைப் பெரியகோவிலில் உள்ள நந்தி ஒரே கல்லால் செய்யப்பட்டது. இதன் உயரம் 14 மீ, நீளம் 7 மீ, அகலம் 3 மீ ஆகும். நந்தி மண்டபம் நாயக்கர் காலத்தில் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது.

மத்திய அரசு 1995ம் ஆண்டில் மாமன்னர் ராஜராஜ சோழன் உருவம் பதித்த 2 ரூபாய் தபால் தலை வெளியிட்டது.

 தஞ்சை பெரிய கோவிலின் ஆயிரம் ஆண்டு நிறைவு விழா தஞ்சை மாநகரில் 2010 செப்டம்பர் 25, 26-ந் தேதி ஆகிய 2 நாட்கள் சிறப்புற நடைப்பெற்றது.
மத்திய மந்திரி ஆ.ராசா பெரியகோவில் உருவம் பொறித்த 5 ரூபாய் சிறப்பு தபால் தலையை முதல்-அமைச்சர் கருணாநிதி முன்னிலையில் வெளியிட்டார். அதை மத்திய மந்திரி ஜி.கே.வாசன் பெற்றுக்கொண்டார்.

சிறப்பு தபால் தலையின் மாதிரி வடிவத்தை, முதல்-அமைச்சர் கருணாநிதி திறந்து வைத்தார். பின்னர் மத்திய மந்திரி எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் பெரிய கோவில் மற்றும் ராஜராஜன் உருவம் பொறித்த 5 ரூபாய் நாணயத்தை வெளியிட, அதை மத்திய மந்திரி நாராயணசாமி பெற்றுக்கொண்டார்.

Thursday, November 25, 2010

திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயில்

                                                    அம்மன் கமலாம்பிகை

                                             மூலவர் வன்மீகநாதர்

                                             நேர் கோட்டில் நவக்கிரகங்கள்


                                                       நிற்கும் நந்தி

                                               பெருமாள் மார்பில் சிவன்

                                                        கமலாலய தீர்த்தம்

                                                         தியாகராஜ சுவாமி

                                                         திருவாரூர் பெரிய தேர்

                                                      வாதாபி கணபதி


மூலவர்: தியாகராஜர் 
அம்மன்: கமலாம்பிகை


திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயில் தமிழகத்தின் புகழ்பெற்ற தலம். இக்கோவில் மிகவும் பழமையானதாகும். தியாகராஜர் என்றால் "கடவுள்களுக்கெல்லாம் ராஜா' என்று பொருள்.

 திருவாரூர் என்றாலே தேர் தான் நினைவிற்கு வரும். இத்தேர் தமிழகத்திலுள்ள தேர்களிலேயே மிகப் பெரியதாகவும், அழகாகவும் இருக்கும்.  இதனால் "திருவாரூர் தேரழகு" என்று எல்லோராலும் போற்றப்படுகிறது.
மாசி மாத அஸ்தத்தில் கொடி ஏற்றி பங்குனி மாதம் ஆயில்யத்தில் தேரோட்டம்
நடைபெறுகிறது .இத்தேரோட்டத்தை காண கண் கோடி வேண்டும்.  இத்தேரோட்டத்தை பார்க்க மக்கள் கூட்டம் அலைமோதும். 


பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை தான் சிவாலயங்களில் பிரதோஷ பூஜை நடத்தப்படும். ஆனால், திருவாரூர் தியாகராஜர் கோயிலில் தினமும் மாலை
பிரதோஷ பூஜை நடத்தப்படுகிறது.

இதை "நித்திய     பிரதோஷம்' என்பார்கள். இந்த நேரத்தில் தியாகராஜரை முப்பத்து முக்கோடி தேவர்களும் தரிசிப்பதாக ஐதீகம். எனவே,   இந்தக் கோயிலுக்கு மாலை வேளையில் சென்றால், எல்லா தேவர்களின்     அருளையும் பெற்ற புண்ணியம்  கிடைக்கும்.

மூலவர் வன்மீகிநாதரை வழிபட்டால் எண்ணற்ற வரங்களும், செல்வ செழிப்பும் கிடைக்கும், பாவங்கள் நீங்கும், ஆணவம் மறையும். அம்மன் சன்னதியில் உள்ள அட்சர பீடத்தை வணங்கினால் கல்வியறிவு பெருகும். 


 

Tuesday, November 16, 2010

திருத்தங்கூர் வெள்ளிமலைநாதர் கோயில்

                                                    மூலவர் வெள்ளிமலை நாதர்

                                                    அம்மன் பெரிய நாயகி

                                                    முருகன்

                                                    மகா மண்டபம்


                                                    அம்மன் சன்னதி
                                                      

                                                          கோயில் பிரகாரம்

                                                     மூலவர் சன்னதி
  


மூலவர்:  வெள்ளிமலை நாதர்
 அம்மன்: பெரிய நாயகி
                                            

பொது தகவல்:

இது ஒரு சிறிய கோயில். 24 வருடங்களுக்கு பிறகு (ஜூன் 2010) இக்கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்று புதுப்பிக்கப் பட்டுள்ளது.  இக்கோயிலில் நவக்கிரக லிங்கங்கள் மட்டும் பாதுகாக்கப்பட்டு வருவது விசேஷம். அனைத்தும் கல்லால் ஆனவை. பெரிதும் சிறிதுமாக உள்ள இந்த லிங்கங்கள் சூரியலிங்கம், சந்திரலிங்கம், அங்காரக லிங்கம், புத லிங்கம், குரு லிங்கம், சுக்ரலிங்கம், சனீஸ்வர லிங்கம், ராகு லிங்கம், கேது லிங்கம் எனப்படுகின்றன. கோயில் பிரகாரத்தில், இந்த லிங்கங்கள் வரிசையாக உள்ளன. இது ஓர் அபூர்வக்காட்சியாகும்.
ராகு கேது பெயர்ச்சிகாலத்தில் சிவனோடு ஐக்கியமாகி விட்ட இந்த லிங்கங்களைத் தரிசிப்பதன் மூலம், கிரக தோஷங்கள் நீங்கப் பெறலாம் என்பது நம்பிக்கை. லிங்க வடிவில் நவக்கிரகங்கள் இருந்தாலும், சாதாரணமாக அமைக்கப்படும் நவக்கிரக மண்டபமும் இங்கு உள்ளது. அம்பாள் சன்னதி கோயிலின் நுழைவு வாயிலில் வலது கைபக்கம் உள்ளது.

தல வரலாறு:

முன்னொரு காலத்தில் உலகம் ஜலப்பிரளயத்தினால் அழிந்தது. இதை மறுபடியும் உண்டாக்கும்படி விஷ்ணுவிடம் சிவன் கூறினார். விஷ்ணு தன் நாபிக்கமலத்தில் இருந்து பிரம்மனை உருவாக்கி, உலகைப்படைக்கும்படி ஆணையிட்டார். உலகமும் உருவானது.
ஓரிடத்தில் ஜலப்பிரளய காலத்திலும் அழியாத வில்வவனம் இருந்தது. அவ்விடம் மகிமையானதாக இருக்க வேண்டும் எனக்கருதிய ராகு, கேது உள்ளிட்ட நவக்கிரக தேவர்கள், அவ்வனத்தில் இருந்த அகஸ்திய நதியின் கரையில் ஆளுக்கு ஒரு லிங்கத்தை உருவாக்கி, ஆயிரம் ஆண்டுகள் பரமசிவனைக் குறித்து தவமிருந்தனர்.
பரமசிவன் அங்கு தோன்றி, புதிய உலகத்தை மண்டலங்களாக பிரித்து, ஒவ்வொரு மண்டலத்திற்கும் ஒரு நவக்கிரகத்தை தலைவராக நியமித்தார். உலகில் மக்கள் செய்யும் பாவ, புண்ணியத்திற்கேற்ப பலன்களை அளிக்கும் அதிகாரத்தையும் வழங்கினார்.
பிரம்மன் இத்தலத்துக்கு வந்து, நவக்கிரகங்கள் அமைத்த லிங்கங்கள் கண்டு மகிழ்ந்து அவ்விடத்திற்கு நவக்கிரகபுரம் என பெயரிட்டார். இதன்பின் தேவேந்திரன் இங்கு வந்து வெள்ளிமலை மன்னவனுக்கு லிங்கம் அமைத்தான். இறைவன் வெள்ளிமலை நாதர் என்றும், அம்பிகை பிரகன்நாயகி என்றும் அழைக்கப்பட்டனர்.

சிறப்பம்சம்:

அதிசயத்தின் அடிப்படையில்: இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார். இத்தலத்தில் நவக்கிரக லிங்கம் இருப்பது சிறப்பு.


சிறப்பு பூஜைகள்:. 




கார்த்திகை, திருவாதிரை, பிரதோஷம், மற்றும் மார்கழி மாதம் முழுவதும் பூஜைகள் செய்யப்படும். மார்கழி மாதத்தில் சூரிய உதயத்தின் பொழுது வெளிச்சம் சிவனின் மேல் விழுவது தனிச் சிறப்பாகும். திருவாதிரை அன்று சொக்கபானை கொளுத்துவது இன்றும் நடைபெற்று வருகிறது.