Vinayagar

Vinayagar

Tuesday, November 16, 2010

திருத்தங்கூர் வெள்ளிமலைநாதர் கோயில்

                                                    மூலவர் வெள்ளிமலை நாதர்

                                                    அம்மன் பெரிய நாயகி

                                                    முருகன்

                                                    மகா மண்டபம்


                                                    அம்மன் சன்னதி
                                                      

                                                          கோயில் பிரகாரம்

                                                     மூலவர் சன்னதி
  


மூலவர்:  வெள்ளிமலை நாதர்
 அம்மன்: பெரிய நாயகி
                                            

பொது தகவல்:

இது ஒரு சிறிய கோயில். 24 வருடங்களுக்கு பிறகு (ஜூன் 2010) இக்கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்று புதுப்பிக்கப் பட்டுள்ளது.  இக்கோயிலில் நவக்கிரக லிங்கங்கள் மட்டும் பாதுகாக்கப்பட்டு வருவது விசேஷம். அனைத்தும் கல்லால் ஆனவை. பெரிதும் சிறிதுமாக உள்ள இந்த லிங்கங்கள் சூரியலிங்கம், சந்திரலிங்கம், அங்காரக லிங்கம், புத லிங்கம், குரு லிங்கம், சுக்ரலிங்கம், சனீஸ்வர லிங்கம், ராகு லிங்கம், கேது லிங்கம் எனப்படுகின்றன. கோயில் பிரகாரத்தில், இந்த லிங்கங்கள் வரிசையாக உள்ளன. இது ஓர் அபூர்வக்காட்சியாகும்.
ராகு கேது பெயர்ச்சிகாலத்தில் சிவனோடு ஐக்கியமாகி விட்ட இந்த லிங்கங்களைத் தரிசிப்பதன் மூலம், கிரக தோஷங்கள் நீங்கப் பெறலாம் என்பது நம்பிக்கை. லிங்க வடிவில் நவக்கிரகங்கள் இருந்தாலும், சாதாரணமாக அமைக்கப்படும் நவக்கிரக மண்டபமும் இங்கு உள்ளது. அம்பாள் சன்னதி கோயிலின் நுழைவு வாயிலில் வலது கைபக்கம் உள்ளது.

தல வரலாறு:

முன்னொரு காலத்தில் உலகம் ஜலப்பிரளயத்தினால் அழிந்தது. இதை மறுபடியும் உண்டாக்கும்படி விஷ்ணுவிடம் சிவன் கூறினார். விஷ்ணு தன் நாபிக்கமலத்தில் இருந்து பிரம்மனை உருவாக்கி, உலகைப்படைக்கும்படி ஆணையிட்டார். உலகமும் உருவானது.
ஓரிடத்தில் ஜலப்பிரளய காலத்திலும் அழியாத வில்வவனம் இருந்தது. அவ்விடம் மகிமையானதாக இருக்க வேண்டும் எனக்கருதிய ராகு, கேது உள்ளிட்ட நவக்கிரக தேவர்கள், அவ்வனத்தில் இருந்த அகஸ்திய நதியின் கரையில் ஆளுக்கு ஒரு லிங்கத்தை உருவாக்கி, ஆயிரம் ஆண்டுகள் பரமசிவனைக் குறித்து தவமிருந்தனர்.
பரமசிவன் அங்கு தோன்றி, புதிய உலகத்தை மண்டலங்களாக பிரித்து, ஒவ்வொரு மண்டலத்திற்கும் ஒரு நவக்கிரகத்தை தலைவராக நியமித்தார். உலகில் மக்கள் செய்யும் பாவ, புண்ணியத்திற்கேற்ப பலன்களை அளிக்கும் அதிகாரத்தையும் வழங்கினார்.
பிரம்மன் இத்தலத்துக்கு வந்து, நவக்கிரகங்கள் அமைத்த லிங்கங்கள் கண்டு மகிழ்ந்து அவ்விடத்திற்கு நவக்கிரகபுரம் என பெயரிட்டார். இதன்பின் தேவேந்திரன் இங்கு வந்து வெள்ளிமலை மன்னவனுக்கு லிங்கம் அமைத்தான். இறைவன் வெள்ளிமலை நாதர் என்றும், அம்பிகை பிரகன்நாயகி என்றும் அழைக்கப்பட்டனர்.

சிறப்பம்சம்:

அதிசயத்தின் அடிப்படையில்: இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார். இத்தலத்தில் நவக்கிரக லிங்கம் இருப்பது சிறப்பு.


சிறப்பு பூஜைகள்:. 




கார்த்திகை, திருவாதிரை, பிரதோஷம், மற்றும் மார்கழி மாதம் முழுவதும் பூஜைகள் செய்யப்படும். மார்கழி மாதத்தில் சூரிய உதயத்தின் பொழுது வெளிச்சம் சிவனின் மேல் விழுவது தனிச் சிறப்பாகும். திருவாதிரை அன்று சொக்கபானை கொளுத்துவது இன்றும் நடைபெற்று வருகிறது.


3 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. நாளைக்கு நான் எழுவேன் என்ற நம்பிக்கையில் தான் தூங்க செல்கிறேன். அதே மாதிரி தான் கடவுளை நான் நம்புகிறேன். எனக்கு மேலே ஒரு சக்தி(கடவுள்) என்னை வழி நடத்தி செல்கிறது என்று. நம்பிக்கை தான் வாழ்க்கை.

    ReplyDelete