Vinayagar

Vinayagar

Saturday, December 11, 2010

மதுரை மீனாட்சி அம்மன் கோவில்.....

                                             மீனாட்சி - சுந்தரேசுவரர்
                                                   கோயில் கோபுரம்
                                                               பொற்றாமரைக் குளம்
                                                                 கோவில் பிரகாரம்
 
                                                     இரவில் கோயில் கோபுரம்


 
                                                      தேரோட்டம்



சிவபெருமான் பெயர்: சுந்தரேசுவரர், சொக்கநாதர், சோமசுந்தரர்
அம்மன்:  மீனாட்சி

தமிழ்நாட்டில் உள்ள சிவபெருமானுக்கான கோவில்களில் மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் சிறப்புடைய ஒன்றாகும். இத்தலத்தில் மீனாட்சி அம்மன் சந்நிதியே முதன்மை பெற்றது. ஆகையால் இத்தலத்தில் முதலில் மீனாட்சியை வணங்கி அதன் பிறகு சுந்தரேசுவரர் சந்நிதி சென்று அவரை வழிபடுவது மரபாக இருந்து வருகிறது.பாண்டிய நாட்டை ஆட்சி புரிந்து வந்த குலசேகர பாண்டியனின் கனவில் சிவபெருமான் தோன்றிக் கூறியதால் அம்மன்னன் கடம்பவனக் காட்டை அழித்து மதுரை எனும் அழகிய நகரத்தை உருவாக்கினான். சிவபெருமான் தன் சடையிலுள்ள சந்திரனின் அமுதத்தைச் சிந்தி புதிய நகருக்கு ஆசி வழங்கினார் என்று வரலாறு கூறுகிறது.

சிவபெருமானின் அணிகலன்களில் ஒன்றான பாம்பு வட்டமாக தன் வாலை வாயினால் கவ்விக் கொண்டு இத்தலத்தின் எல்லையைக் காட்டியதால் ஆலவாய் என்ற பெயர் இத்தலத்திற்கு ஏற்பட்டது என்று ஒரு வரலாறு கூறுகிறது.

விருத்தாசுரன் என்ற அசுரனை வென்ற தேவேந்திரன், தனது பிரம்மகத்தி தோஷம் நீங்க கடம்பவனத்தில் இருந்த இந்த சிவலிங்கத்தை பூசித்து தனது தோஷத்தை போக்கிக் கொண்டதாகவும் ஒரு வரலாறு கூறுகிறது. 

மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் சித்திரைத் திருவிழா, மீனாட்சி திருக்கல்யாணம், மீனாட்சி அம்மன் பட்டாபிசேகம், மீனாட்சியம்மன் தேரோட்டம், புட்டுத் திருவிழா ஆகியவை சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. மேலும் இந்தக் கோயிலில் தமிழ் மாதம் ஒவ்வொன்றிலும் சிறப்பு விழாக்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

உலக அதிசயங்களைத் தேர்வு செய்வதற்காக ஒரு இணையதளம் செய்த முயற்சியில் மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலும் ஒன்றாக இடம் பெற்றிருந்தது. 

 சிவபெருமான் நடனமாடியதாகச் சொல்லப்படும் ஐந்து முக்கிய தலங்களில் மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருத்தலமும் ஒன்று. இது ஐம்பெரும் சபைகளில் வெள்ளி சபை என்று போற்றப்படும் சிறப்புடையதாகும். மற்ற எல்லா இடங்களிலும் இடது காலைத் தூக்கி நடனமாடும் நடராஜர், இங்கு வலது காலைத் தூக்கி வைத்து நடனமாடுகிறார்.

இங்குள்ள மீனாட்சி அம்மன் சிலை மரகதக் கல்லால் ஆனது. எனவே மீனாட்சி அம்மனுக்கு மரகதவல்லி என்று இன்னொரு பெயரும் இருக்கிறது. மேலும் அங்கயற்கண்ணி, தடாதகை, கோமளவல்லி, பாண்டியராஜகுமாரி, மாணிக்கவல்லி, சுந்தரவல்லி என்றெல்லாம் அழைக்கப்படுகிறார்.



3 comments:

  1. ஜாமக்கோள் பிரசன்னம் பயிற்சி வகுப்பு

    ஜோதிடர்களுக்கு ஓர் அறிய வாய்ப்பு!
    ஜாமக்கோள் கணிதம் அடிப்படை விதிகள், பலன் சொல்லும் முறை, வந்தவர் எதற்காக வந்தார் என்பதை தெளிவாகக் கூறும் ஜாமக்கோள் பிரசன்னம்.

    ஜாமக்கோள் கணிதம், அடிப்படை விதிகள், பலன் சொல்லும் முறை, வந்தவர் எதற்காக வந்தார் அல்லது அவர் கேட்ட கேள்வி நடக்குமா? நடக்காதா? நடக்கும் என்றால் எப்போது நடக்கும் என்ற கால நிர்ணயத்தை ஜாமக்கோள் வகுப்பில் கற்றுத்தரப்படும்.

    காணாமல் போன நபர், தொலைந்து போன பொருள், தொழிலில் லாப, நஷ்டம், திருமணம், குழந்தை பிறப்பு, ஆபரேஷன், மரணம், பங்கு சந்தை விபரம் போன்ற கேள்வியாளரின் எந்த கேள்வியானாலும் ஜாமக்கோளின் மூலம் பலன் சொல்ல முடியும். இதுவரை பார்த்த 30,000 க்கும் மேற்ப்பட பிரசன்னங்களின் அனுபவங்கள் மூலம் எளிய முறையில் பகிர்ந்துகொள்ளப்படும்.

    விவரங்களுக்கு http://geminischoolofastrology.blogspot.com/

    ReplyDelete
  2. மதுரை மீனாட்சி கோயிலின் மறைக்கப்பட்ட உண்மை வரலாறு.
    * http://mallarchives.blogspot.com/2012/11/blog-post_9550.html
    * http://mallarchives.blogspot.com/2012/12/blog-post_15.html

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete